மேகி பிரியர்களுக்கு அதிர்ச்சியளித்த நெஸ்லே..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் ஒன்றுதான் மேகி நூடுல்ஸ். மேகி நூடுல்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டாலும் மற்றொருபுறம் மேகி பிரியர்கள் தொடர்ந்து அதனை வாங்கிச் சமைத்து சாப்பிட்ட வண்ணமே உள்ளனர்.

இந்தநிலையில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் நெஸ்லே என இரண்டு நிறுவனங்களும் தங்களது பொருட்களின் விலையினை அதிகரித்துள்ளன.

அதன்படி பால் சார்ந்த பொருட்களின் விலையினை அதிகரித்ததுடன் மேகி பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மேகியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சிறிய பாக்கெட் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாய்க்கு விலையினை அதிகரித்துள்ளது. பெரிய பாக்கெட்டானது 96 ரூபாயில் இருந்து 105 ரூபாய்க்கு  உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியினைக் கேட்ட மேகிப் பிரியர்களோ ஏன் இவ்வளவு விலை உயர்வு? என்று ஷாக்காகி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment