
News
அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் சிதைவு!! நேபாள விமான விபத்து;
உலகில் நாள்தோறும் பல்வேறு விதமான விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக விமான விபத்தானது ஆங்காங்கே நடைபெறுகிறது. இந்த விமான விபத்தில் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சீனாவில் தொடர்ந்து 2 முறை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த வகையில் தற்போது நேபாள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் அவர்களின் உடல் தீவிரமாக மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி நேபாள விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரில் தற்போது 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாதபடி உடல்கள் உருக்குலைந்து உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மஸ்டங் அருகே சனோஸ்வரர் என்ற இடத்தில் மலை சிகரங்களுக்கு இடையே நேபாள விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப் பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
