சிவகார்த்திகேயனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு டிரெய்லர் மற்றும் பட ரிலீஸ் எப்போது

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்க அவரின் சில படங்கள் வரிசையாக தோல்வி அடைவது அவரது ரசிகர்களை லேசான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கனா படம் அவரது முதல் தயாரிப்பாக வந்தது. வெற்றியும் பெற்றது.

3e892e1f5ffbe18aed4b05497b546482

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டைட்டிலில் ராமராஜன் ஏற்கனவே ஒரு படத்தில் பல வருடங்கள் முன் நடித்திருக்கிறார். அதற்காக ஓடு ராஜா என்ற வார்த்தையையும் சேர்த்திருக்கிறார்கள்

இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்குபவர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர். இப்படம் வரும் ஜூன் 14ல் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக வரும் ஜூன் 3ல் ஆடியோ டிரெய்லர் வெளியாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment