நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி விலகியது ஏன் ?

நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் ஜெய பிரபா ராஜினாமா செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வென்றது.

அதிமுக 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் இதர இடங்களிலும் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியானது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி திமுக உத்தரவிட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் துணைத்தலைவராக வென்ற ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அமைச்சரிடம் வழங்கியுள்ளார்.

மேலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் தாம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக ஜெயபிரபா விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment