தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை! நெல்லையில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது…!

இந்த மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை நம் தமிழகத்தை முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கட்சிகள் மட்டுமின்றி தேர்தல் பணி அதிகாரிகளும் தங்களது பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாவட்ட வாரியாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக நெல்லையில் 31 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 6 பேர், புறநகர் பகுதிகளில் 25 பேர் என மொத்தம் 31 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

31 ரவுடிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக நெல்லை ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக 51 அலுவலர்கள் கொண்ட 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் சுமார் 4500 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment