Connect with us

கம்யூனிஸ்ட்-திராவிட முன்னேற்ற கழகம் இடையே பேச்சுவார்த்தை!

News

கம்யூனிஸ்ட்-திராவிட முன்னேற்ற கழகம் இடையே பேச்சுவார்த்தை!

cd0ee711e30c33571b6233ac45207aea-1

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படும் திமுக கட்சி, காங்கிரஸ் கட்சி, விசிக, மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. மேலும்  தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் உள்ளது என்ற தகவல் வெளியானது.

9548d2c005f8d5f97084c911bf8e3252

திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்றுக் கொண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பின்னர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுக கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  12 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து அதில் ஆறு தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை விடுக்கிறது  பவானி, திருப்பூர், வில்லிப்புத்தூர் உள்ளிட்ட 12 தொகுதிகளை கொடுத்து அதில் ஆறு தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை விடுக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top