Connect with us

கிரீன் கலர் காஸ்ட்யூமுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் : சமந்தாவின் நெத்தியடி பதில் !!

samantha 1280 1

பொழுதுபோக்கு

கிரீன் கலர் காஸ்ட்யூமுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் : சமந்தாவின் நெத்தியடி பதில் !!

கிரீன் கலர் காஸ்ட்யூமுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் : சமந்தாவின் நெத்தியடி பதில் !!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த கிரீன் கலர் காஸ்ட்யூமும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இதற்கு பல பாசிட்டிவ் கமண்ட்ஸ்கள் வந்தாலும், ஒரு புறம் இந்த மாதிரியான ஆடைகள் அணிவதால் தான் விவாகரத்து நடைபெற்றதா ? என்றும் ஒரு வழியா நாகசைதன்யா தப்பிச்சிட்டாரு என்ற பல்வேறு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக  நடிகை சமந்தா அவர்கள் ஒரு தகவலை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு பெண்ணாக இருக்கும்போது, நான் நினைக்கும் ஒரு  விஷயம் என்பது  இவங்க இப்படிதான் இருக்கனும் அவங்க அப்படிதான் இருக்கனும் என்பதுதான்.

குறிப்பாக ஒரு பெண்ணின் உடை, இனம், கல்வி, சமூக நிலை, தோற்றம் ஆகியவற்றை பவ்வேறு கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர். இதனால் நாம் எல்லோரும் 2022- ல் இருப்பதால் ஒரு பெண்ணின் ஆடைகளை வைத்து முடிவு எடுக்காமல் நம்முடைய வாழ்கையை சிறப்பாக மாற்றுவது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும் போது சுயவிமர்சனமும் மிகவும் முக்கியம். நமது கொள்கைகளை வேறொருவர் மீது சுமத்துவதால் எந்தவித நன்மையும் கிடைப்பதில்லை என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top