நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் சில ரிலீஸாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு கொண்டு இருக்கும். என்ன என்றால் அந்தப் படத்தின் டிரெய்லரும், அப்டேட்களும் தான் படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் ரிலீஸானதும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கின்றன.

பொதுவாக எதிர்மறை விமர்சனங்கள் அதாவது நெகடிவ் கமெண்ட்ஸ் படத்தை அதளபாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும். ஆனால் இங்கு நாம் காணும் படங்களோ சூப்பர்ஹிட்டாகி உள்ளன. அது எப்படி என்று பார்க்கலாமா…

காஞ்சனா 3

Kanchana 3
Kanchana 3

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இது ஒரு காமெடி படம் என்றாலும் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம். பேய் படங்கள் வரிசையில் இரட்டை அர்த்த வசனங்களைக் கலந்து மசாலா படமாக கொண்டு வந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

கோவை சரளா காமெடியும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காமல் அசர வைக்கிறது. இந்த விமர்சனங்கள் எல்லாம் நெகடிவ்வாக இருந்தாலும் படம் ஜெட் ரேஞ்சுக்குப் போய் வெற்றியின் வாசலை அடைந்துவிட்டது.

கபாலி

ரஜினிக்கு கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்வியால் கட்டாய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று களம் இறங்கிய படம் தான் கபாலி. ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது. படத்தின் விமர்சனங்களோ படு கேவலமாக இருந்தன.

தாத்தா வயசுல நாயகன். பேத்தி வயசுல நாயகி. தேவையா இது தலைவருக்கு? இதெல்லாம் வேலைக்கு ஆகாது… என்ற அளவில் இருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் உடைத்து தூள் தூளாக்கி படத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றார் சூப்பர்ஸ்டார்… கபாலிடா…!

சர்கார்

Sarkaar
Sarkaar

படத்தின் ஹீரோ விஜய் அரசியலில் குதித்துவிட்டார். படம் அவ்ளோ தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் ஹீரோ அரசியல்ல குதிக்கிறேன். ஆட்சியைப் புடிக்கிறேன்னு சொல்லும்போது தான் திரைக்கதை படத்தை டம்மியாக்கி விடுமோ என நம்மை பயமுறுத்துகிறது. ஆனால் ரசிகர்கள் தான் படத்தைத் தப்பிக்க வைத்து சூப்பர்ஹிட்டாக்கி விட்டனர்.

பிகில்

Bigil
Bigil

இது விஜய் படமா, அட்லி படமா, கமர்ஷியலா, ஸ்போர்ட்ஸா என்று நம்மை மண்டையைப்போட்டுக் குழப்பச் செய்கிறது. படம் முடிஞ்சா கூட நமக்கு என்ன நடந்ததுன்னு புரியவே மாட்டேங்குது. தேவையற்ற காட்சிகள், லாஜிக் ஓட்டைகள் நம் ரசனைக்கு பங்கம் விளைவிக்கிறது.

துளியும் நம்பகத்தன்மை அற்ற கால்பந்து காட்சிகள் நமக்கு எரிச்சலைத் தருகிறது. என்றாலும் படம் இந்த அளவுக்கு சூப்பர்ஹிட்டாக காரணம் விஜய் என்ற ஒற்றை மனிதரின் பங்களிப்பு தான்.

ரெமோ

Remo
Remo

திருமணம் நிச்சயமான பெண்ணை நாயகன் கவரும் கதை. இந்தக் கதை பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. இதென்ன? இப்படி எல்லாமா எடுப்பார்கள் என்று கேலி செய்தன.

படத்தின் ரிலீசுக்கு முன்னர் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், அனிருத்தின் அசத்தலான பாடல்களும், இளம் ரசிகர்களின் ஆதரவும் படத்தின் வெற்றிக்கு உறுதுணை செய்தன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.