கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ராணுவ வீரரின் குடும்பத்துக்கு முதல்வர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் தாக்குதல் குறித்த வதந்தி – அதிரடி நடவடிக்கை !
மேலும், சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை பிரதமர் சந்தித்ததை குறிப்பிட்டு, தமிழகத்தில் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும், யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் கூறினார்.