சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல்! ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படவில்லை!!: அமைச்சர்

இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் கூடி உள்ளது. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் வரிசையாக உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதா பற்றி சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.

அதன்படி நீட் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக இரு முறை ஆளுநரை நேரில் சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்றும் கூறினார். சுமார் நூற்றி நாற்பத்தி இரண்டு நாட்களுக்கு பிறகு சில காரணங்களை சுட்டிக்காட்டி சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தான் மசோதாவை அனுப்பி இருக்க வேண்டும் என்றும் என்று கூறினார். சட்டம் முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியல்ல என்றும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவு அல்ல என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

பொதுமக்களின் கருத்தை தெரிவித்து உரிய ஆய்வுக்கு பிறகே நீட் விலக்கு கோரலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்தது என்றும் கூறினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விளக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். நீட்தேர்வு காலத்திலிருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு எதிர்க்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார். நீதிபதி தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த பரிந்துரை அடிப்படையிலேயே நீட் தேர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏன் நீட் தேர்வு விலக்கு தேவை என்பதற்கான காரணங்கள் சட்ட அம்சங்கள் மசோதாவில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment