நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் உரை;

ஜனவரி 5ஆம் தேதி நம் தமிழகத்தில் மறக்க முடியாத நாளாக காணப்படுகிறது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டின்  தமிழகத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் ஆளுநர் ரவி முதலில் உரையாற்றினார். இதில் பலரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் நீட் மசோதா விலக்கு.

நீட் மசோதா விலக்கு குறித்து ஆளுநர் ஏதேனும் உரையாற்றுவார் என்று காத்திருந்த நிலையில் பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் எதிர்கட்சியான அதிமுக போன்றோர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி நீட் மசோதா விலக்கிற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

அதோடு அதிமுக மற்றும் இதர கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று நீட் மசோதா விலக்கிற்காக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நீட் மசோதா விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நீட் விலக்கு தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார் என்று முதலமைச்சர் உரையாற்றினார். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment