Connect with us

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! நியூட்ரினோ அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்!!

ban neet

செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! நியூட்ரினோ அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! நியூட்ரினோ அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்!!

இன்றைய தினம் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டார். அதில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பலரை சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் பிரதமர் மோடியை முதலாவது சந்தித்தார்.

அப்போது அவர் பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்தார். அதில் ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து வழங்க என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 2002 ஆண்டுக்குப்பின் ஜிஎஸ்டி தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர வழிகளை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ அமைக்கும் திட்டத்தை கைவிட பிரதமர் மோடியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் 2 விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். குருவிகாரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் வலியுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top