செப்டம்பர் 7-ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி நாடுமுழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் படி, தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வுகளுக்கு பல ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

அதே போல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்காக சுமார் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் மத்தியில் கேள்வியெழுந்தது. தற்போது செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீட் தேர்வுக்கான விடை குறிப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 30-ம் தேதியில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment