நீட் மதிப்பெண் குறைவு; மருத்துவராக முடியாது! மனமுடைந்த மாணவன் தற்கொலை!!

தற்போது அனைத்து பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வினால்  மாணவர்கள் இன்னல் அனுபவிக்கின்றனர். குறிப்பாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

நீட்

இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஒரு மாணவர் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு சுற்றி உள்ள மக்களை சோகத்தில் தள்ளியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாணவன் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த மாணவன் சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் நீட் தேர்வில் 261 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தன்னால் மருத்துவராக முடியாது என மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனால் மாணவர் சுபாஷ் குடும்பத்தில் ஆழ்ந்த சோகம் நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment