நேற்றைய தினம் தமிழகத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. குறிப்பாக 2022ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் திமுக எம்பி டி.ஆர். பாலு அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழக எம்பிக்களை சந்திக்க மறுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து மறுத்து வருகிறார். தமிழ்நாடு எம்.பி.களை சந்திக்க அமித்ஷா மறுத்ததால் அவரது அலுவலகத்தில் சென்று மனு கொடுக்கப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் எள்ளளவும் தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது சமூக நீதிக்கான அடுத்த கட்ட போராட்டம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்பதில் நம் அரசு உறுதியாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார். பள்ளிக்கல்வி அமைப்பையேஅர்த்தமற்றதாக மாற்றி உள்ளது இந்த நீட்தேர்வு என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நுழைவுத்தேர்வு ஏழை எளிய கிராம மாணவர்களை பாதிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பது போல் உள்ளது நீட்தேர்வு என்றும் ஸ்டாலின் கூறினார். நீட் விலக்குக் கூறும் சட்டம் முன்முடிவு ஆளுநரால் ஒன்றிய அரசுக்கும் அறிவிக்கப்படாமல் உள்ளது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.