Connect with us

தேசிய கல்வி கொள்கை வந்துவிட்டால் இளநிலை படிப்புக்கு நான்காண்டுகள் படிக்க வேண்டும்; நீட் தேர்வை விட கொடுமை!

national education

செய்திகள்

தேசிய கல்வி கொள்கை வந்துவிட்டால் இளநிலை படிப்புக்கு நான்காண்டுகள் படிக்க வேண்டும்; நீட் தேர்வை விட கொடுமை!

தேசிய கல்வி கொள்கை வந்துவிட்டால் இளநிலை படிப்புக்கு நான்காண்டுகள் படிக்க வேண்டும்; நீட் தேர்வை விட கொடுமை!

தமிழகத்தில் உள்ள பல ஏழை, எளிய மாணவ மாணவிகளின் மருத்துவ படிப்பிற்கு பெரும் தடையாக காணப்படுவது நீட்தேர்வு தான். இந்த நிலையில் இதனை விட மிகவும் கொடுமையான ஒன்றாக தேசிய கல்வி கொள்கை காணப்படுகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அதன்படி நீட் தேர்வு முறையை விட கொடுமையானது தேசிய கல்விக் கொள்கை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தற்போதுள்ள கல்வி முறையை மாற்றக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

தேசிய கல்வி கொள்கை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யும் என்பதால் அதனை தமிழக அரசு முற்றிலுமாக எதிர்க்கிறது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். ஒன்றிய அரசின் உயர்கல்வி வரைவு திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்துரைக்கிறது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து என்றும் கூறினார். மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களின் பயிலும் ஆர்வம் குறையும் என்றும், இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை 100 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top