Connect with us

நீட் தேர்வு-நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!

neet cancle

செய்திகள்

நீட் தேர்வு-நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பது நீட் தேர்வுக்கு மட்டும்தான். இந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் வருஷா வருஷம் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

எனவே  நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் சட்டப்பேரவையில் அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையிலும் கூட இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஹால் டிக்கெட் நாளை முதல் எடுத்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை கூறிள்ளது. அதன்படி நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் என்று கூறியுள்ளது.

https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஜூலை 17ஆம் தேதி நாடெங்கும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top