Connect with us

நீட் தேர்வில் தோல்வி! ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி!!

poison alcohol

தமிழகம்

நீட் தேர்வில் தோல்வி! ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி!!

திருவள்ளூர் மாவட்டம் வேஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவி ஜெயசுதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியது. இந்த சூழலில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

அதன் படி, திருவள்ளூர் மாவட்டம் வேஞ்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மணிவேல். இவருடைய 17 வயதான ஜெயசுதா என்பவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயசுதா வீட்டில் இருந்த ஆசிட் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த ஜெயசுதாவை மீட்ட வர்களுடைய பெற்றோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top