Connect with us

பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு.!! 1:30 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி இல்லை.!!

நீட்

செய்திகள்

பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு.!! 1:30 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி இல்லை.!!

நாளைய தினம் நாடெங்கும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில் நீட் எழுதும் மாணவ மாணவிகளுக்கு சில வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பிற்பகல் 1:30 மணிக்கு நீட் தேர்வு மையம் நுழைவு வாயில் மூடப்படும் என்றும் அதன்பின் மாணவர்கள் வந்தால் அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது.

பேன் கார்டு, ஓட்டர் ஐடி, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை மாணவ மாணவிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மாணவர்கள் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு மையத்தில் வழங்கப்படும் n-95 முக கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட் உரிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகை பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.

மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்து இருக்க அனுமதி அளித்துள்ளது. செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருளையும் மாணவர்கள் தேர்வறையில் கொண்டு வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top