ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு!!! தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிப்பு?
நம் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருமனதாக எதிர்ப்பது நீட் நுழைவுத் தேர்வுக்கு தான். ஏனென்றால் இந்த நீடித்த நுழைவுத் தேர்வு தமிழகத்தில் வருடா வருடம் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். இவ்வாறுள்ள நிலையில் நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி 20 நிமிடங்கள் ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் மாற்றம் ஏற்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் மூன்று மணி நேரமாக தேர்வு நடைபெற்று நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான தேர்வு 3 மணி இருபது நிமிடமாக நிர்ணயித்து தேசிய தேர்வும் முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
