
செய்திகள்
தமிழில் இவ்வளவு பேர் தானா? நாடெங்கும் நாளை முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு..!!
தமிழகத்தில் உள்ள அனைவரும் எதிர்த்தாலும் நீட் நுழைவுத் தேர்வு என்பதனை ரத்து செய்ய முடியாததாக மாறிவிட்டது. ஏனென்றால் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதியில் பிரதான ஒன்றாக நீட் ரத்து செய்யப்படும் என்பதனை அறிவித்திருந்தது.
இதற்காக வரிசையாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அவை ஆளுநரிடம் அனுப்பப்பட்டன. ஆனால் ஆளுநராக தொடர்ந்து அதனை ரத்து செய்து வந்தார். இருப்பினும் கூட நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் அனைத்து கட்சியினரால் ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீட் தேர்விற்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகமாக இருந்தது. ஜூலை 17ஆம் தேதி ஆன நாளைய தினம் நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நாடெங்கும் நடைபெறுகிறது. தமிழ் ஹிந்தி உட்பட மொத்தம் 13 மொழிகளில் நடக்கும் இந்த நீட் நுழைவு தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ் மொழியில் 31,803 பேர் உள்பட தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 42,286 பேர் நீட் நுழைவுத் தேர்வு எழுத உள்ளனர்.
