நீட் தேர்வு அச்சம்! பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை..

அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்த நடராஜன் – உமா ராணி தம்பதியின் மகள் நிஷாந்தி என்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மாணவி கடந்த 2021-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 529 மதிப்பெண்கள் எடுத்தாக கூறப்படுகிறது. இதனிடையே முதல் தடவை நீட் தேர்வு எழுதும் போது மாணவி தோல்விடைந்த நிலையில் தற்போது நாளை நீட் தேர்வு நடைபெற இருப்பதால் இரண்டாவது முறையாக மாணவியின் தேர்வுக்கு ஆயத்தமாகி இருந்ததாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் பெற்றோர்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment