Connect with us

நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் எப்போது? சுப்ரீம் கோர்ட் தகவல்

neet 1280

News

நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் எப்போது? சுப்ரீம் கோர்ட் தகவல்

நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் எப்போது? சுப்ரீம் கோர்ட் தகவல்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த நிலையில், தேர்வு அறிவிப்புக்கு பின்னர் திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தேர்வு அறிவிப்பிற்கு பிறகு பாடத்திட்டம் மாற்றப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வந்த நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் அமலாகும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மத்திய அரசின் பதிலை ஏற்று இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டு முதலே அமலாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top