நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! திமுக அரசுக்கு முழு ஆதரவு தரும் பாமக!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக, அதிமுக, பாஜக, பாமக போன்ற பல கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார். திடீரென்று பாஜக நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமல்லாமல் நீட்தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல என்று கூறியது. இந்த நிலையில் பாமக கட்சி நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறியுள்ளது.

அதன்படி நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே. மணி கூறினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் துணை நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று ஜி.கே.மணி கூறினார்.

இதனைப் போன்று தமிழகத்தின் எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக திமுக அரசு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் நிச்சயமாக அதிமுக துணை நிற்கும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment