நீட் மசோதாவா? தமிழக அரசுக்கே அதை திருப்பி அனுப்புங்கள்! ஆளுநரின் முடிவு;
தமிழகத்தில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கிய முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் நீட் மசோதா பற்றி எந்த ஒரு அறிவிப்பும் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இதர கட்சிகள் மெல்ல மெல்ல வெளிநடப்பு செய்தது.
அதன் பின்னர் அதே வாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நீட் மசோதா விலக்கு குறித்து கூடப்பட்டது. இந்த நாளில் ஆளுநர் மாளிகைக்கு நீட் மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவரோ நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விலகியுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நீட் விலக்கு மசோதா உள்ளதாக ஆளுநர் என்ற விளக்கம் அளித்தார். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது என்று ஆளுநர் ரவி கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
