நீட் தேர்வு ரத்து தொடர்பாக நாளை மறுதினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது

இந்தியா முழுவதும் மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வை கடந்த இரண்டு வருடங்களாக மத்தியில் இருக்கும் பிஜேபி அரசானது தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த நீட் தேர்வை இந்தியாவில் தமிழ்நாட்டில் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நீட் தேர்வு மிகவும் கடுமையாக இருப்பதால் அரியலூர் அனிதா இன்னும் ஒரு சில மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இறந்துள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி பலவித போரட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளும் கட்சியாக இருந்தபோதும் இதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்துள்ளது இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து பேச  திமுக அரசு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி நாளை மறுதினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment