நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்

மனிதனாய் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. திருமணம், பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்து ஆளாக்கி.. என வரிசையாய் வாழ்வில் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்து வயது முதிர்ந்து முடிவில் இறைவனடி சேர்வதைத்தான் எல்லோரும் விரும்புவர். ஆனால், விதிப்பயனாக சிலர் நோய், விபத்தின் காரணமாக சிறிய வயதிலேயே அகால மரணம் அடைவர்.

சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என சிவனுக்கு மற்றொரு பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம் என்று பொருள். ஜயம் என்றால் வெற்றி என பொருள்.  உயிர்களை பிரித்தெடுத்து செல்லும் எமனையும் அன்பால் வென்றவன் என இதற்கு பொருளாம்.

a4a8c8950015280bd241a9ccfbc95156

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் எம பயம் நீங்கும். அகால மரணம் ஏற்படாது. நாட்பட்ட நோய் நீங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.