பிற இந்திய மொழிகளை கற்க வேண்டும்! ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் மறுப்பு;

ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்தி போன்ற இந்திய மொழிகள் திணிக்கப்படுவதற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர்களை நினைவு கூறும் வண்ணமாகாக ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்படி ஆளுநர் பிற இந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டங்களின் விளைவாக இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க படுகிறது என்று தங்கம் தென்னரசு கூறினார்.

மும்மொழிக் கொள்கையை வேண்டும் என்ற கருத்து ஏற்படும் வகையில் ஆளுநர் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார் நேரு.

இருமொழிக் கொள்கையால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதில்லை என்று கூறினார். பிற இந்திய மொழிகளை கற்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருப்பது இந்தியை முன்னிலைப்படுத்தும் சொற்பிரயோகம் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment