நீட் விலக்கு மசோதா: ஆளுநர் திருப்பி அனுப்புவதால் என்ன பயன்? முதல்வருக்கு பாஜக கேள்வி..
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக அரசுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் முழு ஒத்துழைப்பு கொடுக்க பாஜக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைப்பதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா மூலம் அரசியல் செய்யலாம் என தப்பு கணக்கில் உள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மாணவர்களின் உயிரோடு விளையாடி அரசியல் செய்ய நினைப்பது பாஜக அனுமதிக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
