நீட் விலக்கு மசோதா: சட்டப் பேரவையில் விவாதம்; ஆதரவு தரும் கட்சிகளின் பட்டியல் இதோ!

இன்று காலை தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரானது நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மீண்டும் நீட் மசோதாவை தாக்கல் செய்தார்.

நீட் விலக்கு மசோதா குறித்து பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களைக் கூறிக் கொண்டு வருகிறது. அந்த செயல் நீட் விலக்கு மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சி மனதார ஆதரிக்கிறது என வேல்முருகன் பேசியுள்ளார்.

அதேவேளையில் நீட் தேர்வால் ஏழை, எளிய, பட்டியலின மாணவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கினால் நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு முயற்சி செய்தே ஆகவேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல என்று மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் கூறியுள்ளார்.

ஆளுநரின் வரம்புகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவையே என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவம் என்பது சமூக நீதி தொடர்புடையது நீட் தேர்வு விலக்கு மசோதாவை மதிமுக வரவேற்கிறது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment