நீட் விலக்கு கோரிக்கை மசோதாவை தமிழ்நாடு ஆளுநர், சபாநாயருக்கு திருப்பி அனுப்பியது அதிர்ச்சியை அளித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழக ஆளுநர் நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழக மக்களை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே நாளை (5-ம் தேதி) நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் ஜனாதிபதியை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது என்றும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு என்பதே மாணவர்களுக்கு முழு பயனை தரும் என தெரிவித்தார்.