Connect with us

“சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும்” எதிரான உயிர்கொல்லி தேர்வு நீட்!!

செய்திகள்

“சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும்” எதிரான உயிர்கொல்லி தேர்வு நீட்!!

4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

தற்போது தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படும் நுழைவுத்தேர்வு என்றால் அதனை நீட்தேர்வு என்றே கூறலாம். மேலும் இதன் காரணமாக தொடர்ச்சியாக தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த நீட் தேர்வு எதிராக பல கட்சியினரும் தங்கள் குரலை கொடுத்து கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் நீட் தேர்வு குறித்து தங்களது கருத்தை கூறியுள்ளார்.1fc62b866b1ae7db4e1f7df177c49e0f

அதன்படி சமூகநீதிக்கு எதிரான உயிர்கொல்லி தேர்வு இந்த நீட் தேர்வு என்று கமலஹாசன்  கூறியுள்ளார். மேலும் சமத்துவதிருக்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்கொல்லி தேர்வு என்றும்  கமலஹாசன் கூறியுள்ளார். நீட் அறிமுகமான பிறகு தமிழ்வழியில்  மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

வசதி படைத்தோர் மட்டுமே மருத்துவராகவும் வாய்ப்பை உருவாக்கும் நீட் தேர்வை விரட்டியடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன்.மேலும் தாய்மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும் சூழலில் அதற்கு எதிரான மனோநிலையை நீட் வளர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உண்மைகளை வெளிக்கொணர்வது சட்ட போராட்ட வழிகளை ஆராய்ந்து சொன்ன ராஜன் குழுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் குழு பரிந்துரைகளின் படி விரைவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top