
Entertainment
இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே வருவேன்.. நஸ்ரியா சொல்வது யாரை தெரியுமா?
நஸ்ரியா நசீம் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார்.
நடிகை நஸ்ரியா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து வெறும் மூன்று தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார். மேலும் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருக்கும் போதே மலையாள முன்னணி இயக்குநர் பாசில் என்பவரின் மகனும் மலையாள முன்னணி நடிகருமான பஹத் பாசிலுடன் சென்ற ஆகஸ்ட் மாதம் நஸ்ரியாவிற்கு திருமணம் நடைப்பெற்றது.
இவரை ரசிகர்கள் மிகவும் நேசிக்க காரணம் இவரது துரு துரு நடிப்புதான். இவரது அந்த அழகான நடிப்புக்காகவே இவரது படங்களை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு நீண்ட நாள்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா. ஆனால் தற்போதுதான் நஸ்ரியா நானி உடன் இணைந்து ‘அடடே சுந்தரா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகை நஸ்ரியா, 8 வருடங்களுக்கு பிறகு, தெலுங்கு முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரைலர் ஜூன் 3 தான் வெளியிடப்பட்டது. இவருக்கு தல அஜிதை மிகவும் புடிக்கும் எனவும் அவருடான் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று பல மேடைகளில் பேசியுள்ளார். இவ்வாறு இருக்கையில் நடிகை நஸ்ரியா நிகழ்ச்சி ஒன்றில் தான் தல அஜித் உடன் இணைய எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் உடனே எங்க இருந்தலும் வந்து விடுவேன் என கூறியுள்ளார். இது நடந்தால் தல ரசிகர்களுக்கும் நஸ்ரியா ரசிகர்களுக்கும் மிக பெரிய விருந்தாக அமையும்.
