படம் எடுக்கும் அனைவருமே அந்த படத்தை எப்படியாவது அதிக லாபத்திற்கு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏன் என்பது போல எதுவும் நடக்காது. படம் பிரம்மாதமாக இருக்கும் பட்சத்தில் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெறும்.
ஆனால் தற்போது படம் வெளியாகும் முன்பே அதன் சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி உரிமை, தியேட்டர் ரைட்ஸ் என அனைத்திற்கும் ஒரு விலை பேசப்பட்டு ஒரு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தின் கதை சூப்பாரக உள்ளதோ சுமாராக உள்ளதோ ஒரு பெரிய நடிகர் அல்லது நடிகை நடித்திருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அதிக விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.
ஏனென்றால் அந்த நடிகருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் எப்படியும் முதல் நாளிலேயே போட்ட காசை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை தான். அதேபோல் டாப் ஹீரோவின் படம் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்து லாபத்தை பெற்று தந்துவிடும். தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்காக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று இருப்பதால், ஒரு பேருந்தை வாங்கி படப்பிடிப்பை சிக்கனமாக நடத்தி முடித்து விட்டாராம் இயக்குனர்.
இந்த படத்துக்கு ஆக்ஸிஜனை குறிக்கும் விதமாக O2 என பெயர் வைத்துள்ளார்களாம். விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே வெறும் 10 கோடி தானாம். ஆனால் படத்தை சுமார் 22 கோடி ரூபாய்க்கு படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வியாபாரம் செய்து விட்டாராம். செலவு போக 12 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.