
பொழுதுபோக்கு
ஹனிமூன் செல்லாமல் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா! காரணம் தெரியுமா?
காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது.இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான்,அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் 300 பேர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சாமி தரிசனம் செய்து செருப்பு காலுடன் பிரகாரத்தை சுற்றியதாக ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள், அதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. இருப்பினும், கோவில் நிர்வாகம் தரப்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நயன்தாராவின் திருமணத்திற்கு பெற்றோர்கள் கலந்து கொள்ளாததால் கொச்சினுக்கு மறு வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் ஆசி பெற்று இன்னும், இரண்டு வாரங்கள் வரை நயன்தாராவின் பெற்றோருடன் கொச்சியில் தங்க போகிறார்கள்.
அடுத்ததாக கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இருவரும் திருமணத்திற்கு முன் திருப்பதி, சாய் பாபா கோவில் என்றும், திருமணம் முடிந்த பின்னரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கோவில், கோவிலாக சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்றே.
ஏ.கே. 61 படப்பிடிப்பில் மஞ்சுவாரியார்! வெளியான மாஸ் தகவல்
