தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர், திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது, குறிப்பாக மொபைல் கொண்டு வர தடை காரணம் இந்த திருமண நிகழ்ச்சியை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியிருந்தது.
மேலும் இதில் விருந்தினர்களுக்கான அறைகள், அலங்காரம், ஒப்பனை, பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு தட்டுக்கும் ₹3500 செலவாகும் உணவு உட்பட முழு விழாவிற்கும் நெட்ஃபிக்ஸ் பணம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் விக்னேஷ், திருமண நிகழ்வில் வந்த முன்னணி பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.படங்களைப் பகிர்வதில் அதிக தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று விக்னேஷ் நம்புவதாகவும், அவர்களின் திருமணம் குறித்த ஆர்வத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். திருமணப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ஒரு மாதத்திற்குப் பிறகும் நெட்ஃபிக்ஸ் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யாததால், தனது முதல் மாத ஆண்டு விழாவில் விருந்தினர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை வெளியிடும் ஒப்பந்தத்தில் இருந்து நெட்ஃபிக்ஸ் பின்வாங்கியதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.
இந்த குழப்பத்திற்கு மத்தியில் நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. நெட்ஃபிளிக்சில் நயன் – விக்கி திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா வாழ்க்கை பயணம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்க்கு டைட்டில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி கிடைத்துள்ளது.
வாரிசு படத்தின் மாஸ் அப்டேட்! படத்தில் விஜய்யின் பெயர், தொழில் என்னனு தெரியுமா?
இந்த தகவல் நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.