Connect with us

ஓசியில் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி !

nayan vignesh marriage stills1 1654838912

பொழுதுபோக்கு

ஓசியில் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி !

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர், திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது, குறிப்பாக மொபைல் கொண்டு வர தடை காரணம் இந்த திருமண நிகழ்ச்சியை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியிருந்தது.

nayanthara-7

மேலும் இதில் விருந்தினர்களுக்கான அறைகள், அலங்காரம், ஒப்பனை, பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு தட்டுக்கும் ₹3500 செலவாகும் உணவு உட்பட முழு விழாவிற்கும் நெட்ஃபிக்ஸ் பணம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் நெட்ஃபிளிக்சில் நயன் – விக்கி திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா வாழ்க்கை பயணம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்க்கு டைட்டில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வந்தது.

திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.தற்போழுது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

Nayanthara chills by the beach with Vignesh Shivan 1280x720 1

விரைவில் களமிறங்க போகும் கமல்-விஜய்-வெற்றிமாறன் கூட்டணி!

தற்போழுது ஹனிமூனுக்கான மொத்த செலவையும் நெட்டிஃபிளிக்ஸ் ஓடிடி தளமே ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அங்கு போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அவற்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறாராம் விக்னேஷ் சிவன்.

எந்த செலவும் இல்லாமல் திருமணமும் செய்து ஹனிமூன் கொண்டாடி வரும் ஜோடி என பலரும் நயன் – விக்கி ஜோடியை கமெண்ட் செய்து வருகின்றனர் .

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top