
பொழுதுபோக்கு
நயன்தாரா- விக்னேஷ் திருமண ரகசியத்தை உடைத்த ராகுல் தாத்தா!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.தனுஷ் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி தட்டியது. இப்படத்தைப் போல் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் காதலும் சக்சஸ் ஆனது.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆர் ஜே பாலாஜி ,ராதிகா ,ஆனந்த் ராஜ், பார்த்திபன்,சரத்குமார்,ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி மற்றும் காதலை மையமாக வைத்து கதைக்களம் அமைந்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த இருவரும் ஜூன் 9 மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நயன் விக்கி திருமணத்திற்கான காரணத்தை நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்த ராகுல் தாத்தா கூறியுள்ளார்.இவர் சினிமா உலகில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் ராகுல் தாத்தா, தற்போழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ராகுல் தாத்தா கேரக்டரில் நடித்த உதய பாணு இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்கி நயன்தாரா திருமணம் குறித்தும் வெளிப்படையாக பேசி உள்ளார். நானும் ரௌடிதான் படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் அவர் சகஜமாக பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ,அப்பொழுது நயனிடன் விக்னேஷ்சிவனை பார்ப்பதற்கு மாஸ்டர் பிரபுதேவா போல இருப்பதாக கூறியிருக்கிறார்.
பாகுபலி ஹீரோவை பார்த்து மிரளும் விஜய்யின் வாரிசு! ரிலீஸ் தேதியை மாற்றியதன் பகிர் பின்னனி!
அதே போல விக்னேஷ்சிவனிடமும் உன்னுடன் பேசி பழக்க பிரபுதேவா மாஸ்டர் மாதிரியே இருக்கேமா அப்படி சொன்னதாகவும் கூறியுள்ளார். இந்த படப்பிடிப்பில் இருந்து தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெற்றிகரமான காதலராக இருவரும் வளம் வந்து தற்போழுது திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
