
Entertainment
நயன்தாரா – விக்கி திருமணத்தை அனைவரும் பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவையாக டூயட் பாடும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற உள்ளது. குறிப்பாக இவர்களது திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்ட இந்த ஜோடி அண்மையில் விக்னேஷ் சிவன் குலதெய்வத்திற்கு நயன்தாரா பொங்கல் வைத்தது இணையத்தில் வைரலானது.
இதை தொடர்ந்து இவர்களது திருமணமும் திருப்பதியில் ஜூன் 9-ல் தான் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்குத் திருப்பதி நிர்வாகத்தின் அனுமதி கொடுக்கவில்லை அதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்தவேண்டாம் என இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.
அதனால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கி – நயன்தாரா திருமண விழாவில் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்து காத்துக்கொண்டிருக்கிறது. அதாவது இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்கவிருக்கிறார் எனவும் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் உண்மையாக இருந்தால் நாம் அனைவருக்கும் அவர்களது திருமணத்தை காண வாய்ப்பு கிடைக்கும்.
