இரட்டை குழந்தை விவகாரம்: முற்றுப்புள்ளி வைத்த விக்கி – நயன்!!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜீன் 9-ஆம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக திருமணம் நடைப்பெற்று முடிந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்து இந்த ஜோடிகள் தங்களது தேனிலவை கொண்டாட தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதே சமயம் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆனதால் இந்த ஜோடி விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றெடுத்தாக சர்ச்சை கிளம்பியது.

தற்போது இரட்டை குழந்தை விவகாரத்தில் ஆதாரங்களை விக்கி – நயன்தாரா தம்பதியினர் சமர்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பித்து இருப்பதாக கூறி வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment