Connect with us

நயன்தாரா- சமந்தாவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இத்தனை ஆயிரமா ? பகல் கொள்ளையா இருக்குதே !

Samantha Ruth Prabhu 1

பொழுதுபோக்கு

நயன்தாரா- சமந்தாவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இத்தனை ஆயிரமா ? பகல் கொள்ளையா இருக்குதே !

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருமே இளைஞர்களின் கனவு கன்னியாகவும் உள்ளனர். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளனர்.

ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து நயன்தாரா 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.

org 65291202204281608

மேலும் சமந்தா தனது சகுந்தலம் , குஷி என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சமிபத்தில் தெலுங்கில் வெளியான “புஷ்பா” படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடமாடி உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சமந்தா.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ளனர்,தமிழ் சினிமாவில் முன்னணி இரண்டு நடிகைகளும் இப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

யூ-டியூபில் மீண்டும் மீண்டும் சாதனை படைத்து வரும் அரபிக்குத்து பாடல் !

Kaathuvaakula Rendu Kaathal

இந்நிலையில் இந்த முன்னணி நடிகைகள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .முன்னணி நடிகைகள் இருவரின் மேக் அப் மேன் மற்றும் உதவியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் மேக் அப் உதவியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 55,000 சம்பளம், சமந்தாவின் உதவியாளருக்கு ரூ. 40,000 சம்பளம் என சமூக வலை தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top