அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்… இளம் நடிகையுடன் நடிக்க மறுத்த நயன்தாரா… அப்படி என்ன கோபம்?
கோலிவுட்டில் வலம் வரும் ஒரே ஒரு டாப் நடிகை நயன்தாரா மட்டுமே. இவருக்கு நிகர் யாருமே இல்லை. இந்த வயதிலும் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதோடு, அதில் ஹிட்டும் கொடுத்து வருகிறார் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான்.
இப்போது இருக்கும் போட்டி உலகில் அறிமுகமான ஒன்றிரண்டு படங்களிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக ஒரே நடிகையாக இருந்து தமிழ் சினிமாவை ஆதிக்கம் செலுத்தி வருவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல.
அதனால் தான் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள். சரி அது போகட்டும். நாம் விஷயத்துக்கு வருவோம் நயன்தாரா கைவசம் சில படங்களை வைத்து மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஒருவர் புதிய படத்திற்காக நயன்தாராவை அணுகியுள்ளார்.
மேலும் படத்தில் உங்களுக்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை வாணி போஜனை நடிக்க வைக்கலாமா? என கேட்டுள்ளார். இதை கேட்டதும் உச்சக்கட்ட கோபமடைந்த நயன்தாரா, அதெல்லாம் வேண்டாம், வேறு யாரையாவது நடிக்க வைங்க என கூறிவிட்டாராம்.
ஆனால் அந்த இயக்குனரோ விடாமல் கட்டாயப்படுத்த கடுப்பான நயன்தாரா, அப்போ உங்க படமே வேண்டாம் என கூறி இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். படமே வேண்டாம் என்று கூறும் அளவிற்கு வாணி போஜன் மீது நயன்தாராவிற்கு என்ன கடுப்பு என்று தெரியவில்லை.
முன்னதாக வாணி போஜன் சீரியலில் நடிக்கும்போது அவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தார்கள். அவ்வளவு ஏன் அம்மணி கூட ஒருமுறை டிவிட்டரில் தன்னை தானே சின்னத்திரை நயன்தாரா என குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை நயன்தாராவிற்கு அந்த கடுப்பாக கூட இருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
