’மாயா’ இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பு!

நடிகை நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்திலும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, அனுபம்கெர், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

‘கனெக்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த புதிய பட அறிவிப்பை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment