லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விஜய் டிவியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டு பல சுவராசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்
அப்போது அவர் தனது விரலில் இருக்கும் மோதிரம் குறித்து கூறிய போது எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தனக்கு பிடித்தது என்ன என்று கேட்டபோது அனைத்துமே பிடிக்கும் என்றும் பிடிக்காத அம்சங்களையும் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்ச்சியின் புரோமோவிலிருந்து நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பது தெரிய வருகிறது. எனவே விரைவில் திருமணம் தேதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
???????????? Lady SuperStar நயன்தாரா – வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #LadySuperstarNayanthara pic.twitter.com/TmY15QeVZ9
— Vijay Television (@vijaytelevision) August 10, 2021