
பொழுதுபோக்கு
‘நயன்தாரா 75 ‘- படத்தின் கதை என்ன தெரியுமா?
கோலிவுட் பாலிவுட்டில் கலக்கி வரும் நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
அந்த வகையில் ஜீன் 9-ஆம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.
தற்போது தேனிலவை முடித்துவிட்டு அட்லி இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த சூழலில் நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன் படி, இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் தான் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் நயனை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், படத்திற்கான பூஜை சென்னையில் நடைப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் ராஜா ராணியை அடுத்து தற்போது ஜெய் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
