காதலனை கரம் பிடிக்கும் நயன்தாரா: எப்போது தெரியுமா ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தனக்கென தனி ஒரு மார்க்கெட்டை உருவாக்கி உள்ளார்

அந்த வகையில் அறம், மூக்குத்தி அம்மன், கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், டோரா போன்ற படங்களில் நடித்து டாப் நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்த நயன்தாராவுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அந்த வகையில் வருகின்ற ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ்- நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment