இடைவேளையுடன் வெளியாகும் ‘கனெக்ட்’… படக்குழுவினர் அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் கடந்த பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காலக்கட்டத்தினை மையமாக கொண்டுள்ள இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் வருகின்ற டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் படத்திற்கு புதுவித சிக்கல் உருவாகியுள்ளது. அதன் படி, 90 நிமிடங்கள் மட்டுமே உருவாகும் படத்தில் இடைவேளை இல்லை என படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இத்தகைய அறிவிப்பானது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது. குறிப்பாக கேன்டீன்களில் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் ‘கனெக்ட்’ படத்தை வெளியிட மறுத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில் படத்திற்கு 59 நிமிடம் 49 நொடிகள் இடைவேளை வைக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவதாக தெரிவித்து உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.