Connect with us

குழந்தையை காப்பாற்ற துடிக்கும் தாயாக நயன்தாரா! 02 டிரெய்லர்..

02

Entertainment

குழந்தையை காப்பாற்ற துடிக்கும் தாயாக நயன்தாரா! 02 டிரெய்லர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நயன்தாரா, அவர் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது,வசூல் சாதனம் படத்துவருகிறது.

02 n

இப்படத்திற்கு பிறகு நயன்தாரா அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வேளையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போதெல்லாம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலாக நடிப்பதில் அதிக ஆர்வமுடையவராக உள்ளார்,அதுபோல உள்ள கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

தற்போது இவர் ஜி.எஸ்.விக்னேஷ் o2 படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். உயிருக்காக போராடும் மனிதர்களுக்காக தனது வாழ்க்கையை பணையம் வைத்து தனது உயிரையே கொடுத்தாவது போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நயன்தாராவுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பினை பெற்று பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் O2 திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.யூடியுப் புகழ் குழந்தை நட்சத்திரம் ரித்விக் இப்படத்தில் நயன்தாராவின் மகனாக நடித்துள்ளார்.

படத்தில் நயன்தாராவின் மகனுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட அதற்காக கொச்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பேருந்தில் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ள்ளாதாக கூறப்படுகிறது.

லோகேஷ்-க்கு தன் கைப்பட கடிதம் எழுதிய கமல்.. அதில் என்ன இருந்தது தெரியுமா?

மேலும் இப்படம் ஜூன் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top