Connect with us

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி ஹனிமூன் முடியும் போது என்ன செய்தார்கள் தெரியுமா?

FV2P0KtaAAAEbj6

பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி ஹனிமூன் முடியும் போது என்ன செய்தார்கள் தெரியுமா?

பாலிவுட், கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைப்பெற்றது.

இந்நிலையில்திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது அடுத்ததாக கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

FWAzFpmaMAAcXiw

இந்நிலையில் தங்களுடைய ஹனிமூனை விக்கி – நயன் தாய்லாந்தில் கொண்டாடி வருகின்றனர். தனிமையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தேனிலவு கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தாய்லாந்தில் பிஸியாக இருந்தாலும் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் அவர்களின் பிறந்த நாளிற்கும் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார் .மேலும் ஹனிமூன் சென்ற இடத்தில் கூட நயன் அவர்கள் மஞ்சள் கயிறு மட்டுமே அணிந்துள்ளார், திருமணத்தின் போது கையில் உள்ள காப்பு கயிறையும் இன்னும் அகற்றாமல் உள்ளார்.

newproject 2022 06 19t112454 343 1655618256

தாய்லாந்தில் நயன் எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கும் சோகமான படத்தை சமீபத்தில் வெளியிட்டார். பார்ப்பதற்கு சோகமாக இருக்கும் இந்த ரியாக்சன் கூட செமதான் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.

பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் மகன் ஒரு கிரிக்கெட் வீரரா? உண்மையா இது?

இந்த நிலையில் நேற்று தேனிலவின் கடைசி நாளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.மேலும் தேனிலவு முடிந்து இந்தியா திரும்பும் போது ஹனிமூனை ஏற்பாடு செய்து தந்த டிராவல் ஏஜென்சி, தங்கியிருந்த ஹோட்டல், அந்த ஹோட்டலின் செப் என அனைவருக்கும் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து பிரியாவிடை அளித்துள்ளனர் விக்னேஷ் சிவன் நயன் ஜோடி.

https://www.instagram.com/p/CfO79o6Pa0D/?utm_source=ig_embed&ig_rid=fcc574f5-c259-490f-ae8b-df5338dbdef8

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top