மீண்டும் கோயில் கோயிலாக சுற்றும் நயன்தாரா!.. கணவருடன் எங்கே எல்லாம் போயிருக்காரு பாருங்க!..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமாரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் அக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பக்தி முத்திப்போன நயன்தாரா:

மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை துவங்கிய நயன்தாரா, சரத்குமாருடன் ஐயா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன், வில்லு, தனி ஒருவன் என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த இவர், மாயா, டோரா, வாசுகி, அறம், கோலாமாவு கோகிலா, அன்னபூரணி போன்ற பெண்களை மையமாக கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார்.

மேலும், நடிகை நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றியதில் இவர்களிடையே காதல் மலர்ந்தது. அதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணமாகி மூன்றே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றெடுத்துக்கொண்டனர். மேலும், அக்குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வீக் என் சிவன் என பெயரிட்டிருந்தனர்.

கணவருடன் கோயில் கோயிலாக:

தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் பாடலாசிரியராக இருந்து வரும் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சிவி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் உள்ளார்.

குழந்தைகள் பிறந்த பின் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா படத்தின் அப்டேட்டிற்கு போஸ்ட் போடுவது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல்வேறு கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், தென்மாவட்டத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் நயன்தாரா தற்போது கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்றுள்ளார். மேலும், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், சாமி தோப்பு தலைமை பதிக்கும் கணவருடன் சென்று தரிசனம் செய்தார்.

மேலும், பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளதால் நேற்று இருவரும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு நயன்தாரா, ஒவ்வொரு ஆண்டும் கன்னிபகவதியம்மன் கோயில் திருவிழா நாளில் வந்து பகவதியம்மனை வழிபட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...